வில்லியனுார்; கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அண்ணாமலை ரெட்டியார் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்புகளை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் தலைவர்களின் பெயரை புதுச்சேரி அரசு சூட்டிவருகிறது.அதன்படி, கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை ரெட்டியார் பெயர் சூட்டப்பட்டது.இதற்கு கூடப்பாக்கம் பேட் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பத்துக்கண்ணு சதுக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு கூடப்பாக்கம் பேட் முக்கியஸ்தர்கள் அய்யனார், வெங்கடாசலம், குப்புசாமி, தமிழரசன், சுப்புராயன் ஆகியோர் தலைமை வகித்தனர். வி.சி., கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE