வில்லியனுார்; 'தீராத வினைகள் தீர்க்கும் திருக்காஞ்சி திருத்தலம்' என்ற கோவில் தலவரலாறு நுால் வெளியீட்டு விழா நடந்தது.வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் காசிக்கும் வீசம் மிகுந்த கெங்கவராத நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தொன்மை, பராம்பரியம், அரிய தகவல்களை மக்கள் அறியும் வகையில் 'தீராத வினைகள் தீர்க்கும் திருக்காஞ்சி திருத்தலம்' என்ற தல வரலாற்று நுாலை ரமேஷ் எழுதி உள்ளார்.இந்த நுால் வெளியீட்டு விழா நேற்று மாலை, கோவில் வளாகத்தில் நடந்தது.சபாநாயகர் சிவக்கொழுந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ., ஆகியோர் நுாலை வெளியிட்டனர்.நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கர், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பெருங்குளம் திருக்கயிலாய ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சார்யா, பிள்ளையார்பட்டி வேத சிவாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சார்யார், காரைக்கால் கண்ட வித்யாபீட ஸ்தாபகர் பால சர்வேஸ்வர சிவாச்சார்யார், கண்ணபிரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.ஆலய தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சார்யார் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE