மயிலம்; மயிலம் ஒன்றியத்தில் நடந்து வரும் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணிகளை விரைந்து முடிப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.கூட்டேரிப்பட்டு ஸ்ரீனிவாசா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மயிலம் பி.டி.ஓ., ஜெகதீசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., புருேஷாத்தமன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன் வரவேற்றார். இதில் 2016--17 முதல் 2019--2020 வரை பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வரும் பயனாளிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறினர்.தமிழக அரசு அறிவித்துள்ள தொகையினை பெற்று பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பி.டி.ஓ., ஜெகதீசன் கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணமணி, வீரம்மாள், புவனேஸ்வரி, சரோஜினி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் வீடுர் மனோகர், மயிலம் சங்கர், கூட்டேரிப்பட்டு நடராஜ், ரெட்டணை சிவகுமார் கொத்தமங்கலம் பார்த்தசாரதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE