செஞ்சி; செஞ்சி அருகே ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பளம் குறைவாக வழங்குவதாக கூறி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்செய்தனர்.செஞ்சி அடுத்த நெகனுார் கிராமத்தில் நேற்று தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.தலைமை தீர்மானக்குழுஉறுப்பினர் சிவா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.ஒன்றிய பொருளாளர்தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த பெண்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 ரூபாய்க்கு பதிலாக 100 ரூபாய் கூலி வழங்குவதாகவும், கடந்த இரண்டு மாதமாக கூலி வழங்க வில்லை என்றும் புகார் கூறினர்.இதையடுத்து தி.மு.க., வினர் கிராம மக்களுடன் சேர்ந்து செஞ்சியில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, வல்லம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் புஷ்பா ஆகியோர் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் அனைவருக்கும் அரசு அறிவித்த கூலியை வழங்கவும், நிலுவையில் உள்ள கூலியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து பகல் 12.45 மணிக்கு பொது மக்கள் மறியலை கைவிட்டனர்.இதனால் அந்த பகுதியில் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE