உளுந்துார்பேட்டை; 'அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது' என குமரகுரு எம்.எல்.ஏ., பேசினார்.உளுந்துார்பேட்டையில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:வரும் 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற பெண்கள் பாசறை, கழக நிர்வாகிகள் என அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை, மகப்பேறு காலத்தில் பெட்டகம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.உளுந்துார்பேட்டை தொகுதியில் சாலை, குடிநீர் வசதிகள், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான திட்டப்பணிகள் ஏதும் இல்லை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்களுக்கான ஆட்சி தொடர அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE