கள்ளக்குறிச்சி; 'கள்ளக்குறிச்சி தொகுதியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதால், வரும் தேர்தலில் அ.தி.மு.க., ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என எம்.எல்.ஏ., பேசினார்.
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ., பிரபு பேசியதாவது:கடந்த தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு நேரடி மோதல் இருந்தது. அதில் வெற்றி பெற்று, முன்னாள் முதல்வர் ஜெ., மற்றும் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் சண்முகம், மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோரது ஒத்துழைப்போடு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளேன்.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம், மருத்துவக் கல்லுாரி, சின்னசேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா, புதிய தாலுகா அலுவலக கட்டடம், தீயணைப்பு நிலையம், இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலைய விரிவாக்கம், 6 பள்ளிகள் தரம் உயர்வு, கிராம சாலைகள் என பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வரும் சட்டசபைத் தேர்லில் அ.தி.மு.க.,வில் யாருக்கு 'சீட்' கொடுத்தாலும் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி வெற்றி பெறும்.இவ்வாறு பிரபு எம்.எல்.ஏ., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE