விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.விழுப்புரம் கல்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச ஸ்ரீ பிரம்மானந்த அவதுாத ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு, 21 அடி உயரத்தில், ஸ்ரீ யோக சனீஸ்வர பகவான் உள்ளார். சனிபெயர்ச்சி முன்னிட்டு ேஹாமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சுவாமி தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அன்னியூர் திரிபுர சுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள சங்கடம் தீர்க்கும் சனிபகவானுக்கும், நேற்று முன்தினம் காலை 5.22 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. மயிலம்மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகசாலை வழிபாடுகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு வழிபாடு, மகாதீபாராதனை நடந்தது. திருவெண்ணெய்நல்லுார்திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்காளாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலில் நெய்விளக்கேற்றி நவகிரகங்களை வழிபட்டனர்.அவலுார்பேட்டை அவலுார்பேட்டையில் அறம் வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை சிறப்பு மகா யாகம் நடந்தது.இதை தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பக்தர்கள் விளக்குகளை ஏற்றி நவகிரகங்களை வலம் வந்தனர்.செஞ்சிசெஞ்சி பகுதி கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.சனி பெயர்ச்சியை முன்னிட்டு செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோம் நடந்தது. காலை 5.22 மணிக்கு சனி பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4;00 மணிக்கு சிறப்பு சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், நடந்தது. காலை 5.22 மணிக்கு சனி பகவானுக்கு மகா தீபாரதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE