உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:வரும் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் பணியாற்றுபவர்கள் தான் தொண்டர்கள். ரஜினி, கமல் கொள்கைக்காக அரசியலுக்கு வரவில்லை. இவர்களால் வருங்கால சந்ததியே வீணாகி விடும்.எம்.ஜி.ஆர்., நடிகர் என்பதற்காக ஓட்டளிக்கவில்லை. அவர் மனிதநேயமிக்கவர் என்பதற்காகவே மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து முதலமைச்சரானார். அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் சிறப்பான பணியால் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு சிறந்த மாநிலம் என பரிசு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 100 ஆண்டுகள் இரட்டை இலை ஆட்சி தொடரும்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், ஏகாம்பரம், பழனிவேல், ராமலிங்கம், சந்திரன், நகர செயலாளர் துரை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத், மதியழகன், செல்வராஜ், பழனி, பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார், அய்யூப்அலி, ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் பூட்டோ உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE