திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி எம்.எல்.ஏ., நடத்திய போராட்டத்தால் அதிகாரிகள், கடையை மூடினர்.திருக்கோவிலுார் அடுத்த தகடி ஊராட்சியில் தி.மு.க., சார்பில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நேற்று முன்தினம் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் டாஸ்மாக் கடையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.அப்போது, கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு தகடி டாஸ்மாக் கடை முன் கடையை மூடும் போராட்டம் நடத்த தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ., கடை முன் கூடினார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., ராஜூ, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன், தாசில்தார் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேரில் வந்த பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, உடனடியாக கடையை மூடினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக்கூறினார். இதனையடுத்து கடை மூடப்பட்டது. இதன்பிறகு எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க.,வினர் மதியம் 2:30 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE