மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில், இதுவரை 6.8 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட, அதிகபட்ச பரிசோதனை இதுவாகும்.
மாநிலத்தில் அரசு தரப்பில் மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகள் என 66, தனியார் வசம் 141 கொரோனா பரிசோதனை கூடங்கள் இருக்கின்றன. இங்கு இதுவரை 1.4 கோடி பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 8.14 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு 7.93 லட்சம் பேர் மீண்டுவிட்டனர். 12,069 பேர் பலியாகினர்.
தற்போது தினசரி ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதனால் இன்னும் அதிகளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் தினமும் 4500 முதல் 5000 கொரோனா பரிசோதனைகள் நடக்கின்றன. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 2500 பேர் வரை சோதிக்கப்படுகின்றனர். இது தவிர கோவை, நீலகிரி மாவட்டத்தில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகளின் ஒரு பகுதி இங்கு சோதிக்கப்படுகிறது.
இதுவரை 6.90 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தான் ஒரு மருத்துவக் கல்லுாரி பரிசோதனை கூடம் மேற்கொண்ட அதிக பட்ச சோதனையாகும்.
பரிசோதனை கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், '9 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனையை துவங்கினோம். அது முதல் 24 மணி நேரமும் செயல்படுகிறோம். இப்போது தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளும் திறன் உள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE