மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் ஆட்டோவில் குட்கா எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில், நேற்று சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்த ஆட்டோவை சோதனை செய்ததில் 3 மூட்டைகளில் குட்கா இருப்பது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த இனையதுல்லா, 33; எனவும், கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து இனையதுல்லாவை, போலீசார் கைது செய்து 4,500 பாக்கெட்டுகள் கொண்ட 3 மூட்டை குட்கா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE