ரிஷிவந்தியம் - ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சாமிக்கு கணபதி பூஜையுடன் மண்டலாபிேஷகம் துவங்கியது.கும்ப கலசத்தை பிருந்தாவன மேடையில் வைத்து, மூல மந்திரங்கள் வாசித்து பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கும்ப கலசம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர்.அங்கு மஞ்சள் பொடி, திருமஞ்சனதுாள், பஞ்சாமிர்தம், பழச்சாறு, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான விசேஷ பொருட்கள் கொண்டு அபிேஷக, அலங்காரம் நடந்து, புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோன்று, கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில்பக்தர்கள் கோமுகி நதிக்கரையில்நீராடி, கும்ப கலசத்தை பிருந்தாவன மேடையில் வைத்துஅய்யப்ப சாமியைஆவாகனம் செய்து மூல மந்திரங்களை வாசித்து பூஜை நடத்தினர்.பின்னர்,கும்ப கலசத்தை ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர்.அங்கு சாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE