கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 23.83 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று, மக்காச்சோளம் 1,500 மூட்டைகள், கம்பு50 மூட்டைகள், வேர்க்கடலை 20 மூட்டைகள், எள் 18 மூட்டைகள், உளுந்து 3 மூட்டைகள், கேழ்வரகு, சிவப்பு சோளம் தலா ஒரு மூட்டை என 172 விவசாயிகள் 1,613 தானிய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,326 ரூபாய், கம்பு 2,396, வேர்க்கடலை 5,800, எள் 6,220, உளுந்து 4,790, ராகி 2,100, சிவப்பு சோளம் 3,366 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, 23 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE