புவனகிரி - புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம், சத்யசாலைதெரு, ராமச்சந்திரன் மகன் அறிவழகன்,35; கொத்தனார்.இவரது மனைவி வனஜா. இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இயற்கை உபாதைக்கு சென்றவர் அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்தார். வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி வனஜா உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் தேடி பார்த்தனர். வாய்க்காலில் கிடந்தவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதித்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE