சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநத்தம் அருகே திருட்டு பட்டப்பகலில் துணிகரம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
திட்டக்குடி; ராமநத்தம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை அறுத்து, ரூ. 1.20 லட்சம் ரொக்கம், நான்கு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,47; இவரது குடும்ப செலவிற்காக ரூ. 2.50 லட்சம் உறவினரிடம் இருந்து வாங்கி வந்தார். அதில் ரூ. ஒரு லட்சம் எடுத்துக் கொண்டு
 ராமநத்தம் அருகே திருட்டு பட்டப்பகலில் துணிகரம்

திட்டக்குடி; ராமநத்தம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை அறுத்து, ரூ. 1.20 லட்சம் ரொக்கம், நான்கு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,47; இவரது குடும்ப செலவிற்காக ரூ. 2.50 லட்சம் உறவினரிடம் இருந்து வாங்கி வந்தார். அதில் ரூ. ஒரு லட்சம் எடுத்துக் கொண்டு பெரம்பலுார் சென்றார். அவரது மனைவி கமலா வயலுக்கும், மகன், மகள் பாட்டி வீட்டிற்கும் சென்று விட்டனர்.இதை நோட்டம் விட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை அறுத்து, உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம், நான்கு சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். மதியம் வீட்டிற்கு திரும்பிய கமலா, பணம், நகை திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சென்று விசாரித்தார்.பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X