குஜிலியம்பாறை : ஆர்.கோம்பை பகுதியில் தொடர் மழை காரணமாக சோள பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குஜிலியம்பாறை பகுதியில் பெரும்பாலான நிலங்களில் மானாவாரி விவசாயமேநடக்கிறது. இப்பகுதியினர் மழைக் காலங்களில் நிலக்கடலை, சோளம், கம்பு பயிரிட்டு, மகசூல் எடுப்பதும், சோள பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாகபயன்படுத்துவதும் வழக்கம். நடப்பாண்டில் பெய்த தொடர் மழையால் மானாவாரி விவசாயம் ஓரளவிற்கு சிறப்பாக இருந்தது. அதே சமயம், ஆர்.கோம்பை பகுதியில் சோளப் பயிர்கள், கதிர் முற்றி வரும்நிலையில் மழையால் கருகியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.விவசாயி ஆறுமுகம், ரெட்டியபட்டி: நான்கு ஏக்கர் சோளம் பயிரிட்டோம். தட்டை நன்கு வளர்ந்து, சோளக் கதிர் பிடித்த நிலையில் தொடர் மழையால் கருகிவிட்டது.விதை சோளத்தை கூட எடுக்க முடியாமல் போனது. இதனால் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க, வேளாண் துறை நடவடிக்கை தேவை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE