பொது செய்தி

தமிழ்நாடு

தரையில் அமர வைத்த விவகாரம் உறுப்பினர்களிடம் நேரடி விசாரணை

Added : டிச 29, 2020
Share
Advertisement
குஜிலியம்பாறை : வாணிக்கரை ஊரட்சியில் ஆதி திராவிட உறுப்பினர்களை தரையில் அமரவைத்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர்.குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத் தலைவர் பெருமாயி. இவரும் 3, 6 வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி, இவர்கள் கலெக்டரிடம் மனு

குஜிலியம்பாறை : வாணிக்கரை ஊரட்சியில் ஆதி திராவிட உறுப்பினர்களை தரையில் அமரவைத்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர்.

குஜிலியம்பாறை ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி துணைத் தலைவர் பெருமாயி. இவரும் 3, 6 வது வார்டு உறுப்பினர்களும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தரையில் அமர வைக்கின்றனர் எனக்கூறி, இவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.இந்நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், துணைத் தலைவர் பெருமாயி உட்பட சிலர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இது தொடர்பாக, நேற்று பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் ஊராட்சி உறுப்பினர்களிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இது குறித்து பி.டி.ஓ., கிருஷ்ணன் கூறுகையில்,'இங்கு நடந்த பிரச்னைகள் குறித்து கேட்டு அறிந்தோம். விசாரணை அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும்',என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X