மீஞ்சூர் - ஐந்து ஆண்டுகளுக்கு பின், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி உள்ளதால், அதை பொது மக்கள் பார்வையிட்டும், சிறுவர்கள் ஜாலியாக அதில் குளித்து விளையாடி வருகின்றனர்.மீஞ்சூர் அடுத்த, சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு உள்ளது. 2015ல், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.அணைக்கட்டில் இருந்து, 20 ஆயிரம் கன அடி வெளியேறியது. அடுத்த வந்த ஆண்டுகளில், ஆற்றில் நீர்வரத்து இல்லாமல், அணைக்கட்டு வறண்டு கிடந்தது.ஒவ்வொரு பருவ மழைக்கும் அணைக்கட்டு நிரம்பும் என, எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஆண்டு எதிர்பார்த்ததை போல், பருவ மழை கைகொடுத்ததால், ஆற்றில் நீர்வரத்து துவங்கியது.இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு பின், வல்லுார் அணைக்கட்டு நிரம்பியது. அணைக்கட்டு நிரம்பியதை அறிந்து, மீஞ்சூர், சீமாவரம், வல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.சிறுவர்கள் அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் ஜாலியாக குளித்து விளையாடி வருகின்றனர். வல்லுார் அணைக்கட்டு பகுதி சுற்றுலாத்தளம்போல் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE