பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை சீரமைப்பதில் அலட்சியம்: தேங்கிய மழை நீர் முழுதும் வீண்

Added : டிச 29, 2020
Share
Advertisement
பொன்னேரி - சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்காததால், தேங்கிய மழை நீர் முழுதும், உடைப்பு வழியாக வெளியேறி, பழவேற்காடு உவர்ப்பு நீருடன் கலந்து வீணானது.பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில், பழவேற்காடு ஏரிக்கு மழை நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதிய தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது.மழை நீரை தேக்கி வைக்கவும்,

பொன்னேரி - சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்காததால், தேங்கிய மழை நீர் முழுதும், உடைப்பு வழியாக வெளியேறி, பழவேற்காடு உவர்ப்பு நீருடன் கலந்து வீணானது.பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில், பழவேற்காடு ஏரிக்கு மழை நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதிய தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது.மழை நீரை தேக்கி வைக்கவும், பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் உள்புகுவதை தடுக்கவும், இந்த தடுப்பணை அமைக்கப்பட்டது.கட்டிய, ஒரே ஆண்டில், தடுப்பணையின் ஒரு பக்கம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. தடுப்பணை சுவர்களில், சிமென்ட் கலவைகள் கரைந்து போனது.கடந்த மாதம் பெய்த மழையால், மேற்கண்ட தடுப்பணை நிரம்பி வழிந்தது. மழைவிட்டு, நீர்வரத்து குறைந்த நிலையில், தடுப்பணை உடைப்பு பகுதி வழியாக தேங்கிய தண்ணீர் முழுதும், பழவேற்காடு ஏரிக்கு சென்று வீணானது. தடுப்பணை இருந்தும் அதை தரமாக கட்டாமலும், உரிய நேரத்தில் பராமரிக்காமலும் போனதால், மழை நீரை சேமிக்க முடியவில்லை.தடுப்பணையில், தண்ணீர் தேக்குவதன் மூலம், விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும், பயன்படும் நிலை இருந்தது. ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், தடுப்பணை இருந்தும், பயனில்லாமல் போனது.அடுத்த வரும், மழைக் காலங்களில், மழை நீர் முழுதும் சேமிக்கும் வகையில், தடுப்பணை உடைப்புகளை சரி செய்து, சேதம் அடைந்து வரும் சுவர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X