சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி படகு சவாரி ஏழு பேர் மீது வழக்கு

Added : டிச 29, 2020
Share
Advertisement
பழவேற்காடு - தடையை மீறி சுற்றுலாப் பயணியரை படகு சவாரிக்கு அழைத்து சென்ற படகோட்டி உட்பட ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.பழவேற்காடு ஏரியில், 2011ம் ஆண்டு, படகு கவிழ்ந்து, 22 சுற்றுலாப் பயணியர் இறந்தனர். அதை தொடர்ந்து, ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி செல்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் பலமுறை எச்சரித்தனர். ஆனால்,

பழவேற்காடு - தடையை மீறி சுற்றுலாப் பயணியரை படகு சவாரிக்கு அழைத்து சென்ற படகோட்டி உட்பட ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.பழவேற்காடு ஏரியில், 2011ம் ஆண்டு, படகு கவிழ்ந்து, 22 சுற்றுலாப் பயணியர் இறந்தனர். அதை தொடர்ந்து, ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி செல்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் பலமுறை எச்சரித்தனர். ஆனால், அதையும் மீறி, விடுமுறை நாட்களில், படகு சவாரி நடைபெறுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில், திருப்பாலைவனம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சுற்றுலாப் பயணியரை படகு சவாரிக்கு அழைத்து சென்ற, நடுவூர், மாதகுப்பத்தை சேர்ந்த படகோட்டி லுகாஸ், 56, மற்றும் ஆறு சுற்றுலாப் பயணியர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X