பொது செய்தி

தமிழ்நாடு

7 ஆயிரம் கி.மீ.,பயணம் செய்த ஜெயின் துறவிகள்

Added : டிச 29, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : உலக அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி முகத்தை துணியால் மூடியபடி ஜெயின் மதத்துறவிகள் 7 ஆயிரம் கிலோ மீட்டர் துாரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று ராமநாதபுரம் பாம்பன்சுவாமி கோயிலில் வழிபாடு செய்தனர்.2013 முதல் உலகஅமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பஞ்சாபில் ஜெயின் மதத்துறவிகள் பாதயாத்திரை தொடங்கி நாடுமுழுக்க ஆன்மிக பயணம்
 7 ஆயிரம் கி.மீ.,பயணம் செய்த ஜெயின் துறவிகள்

ராமநாதபுரம் : உலக அமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி முகத்தை துணியால் மூடியபடி ஜெயின் மதத்துறவிகள் 7 ஆயிரம் கிலோ மீட்டர் துாரம் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று ராமநாதபுரம் பாம்பன்சுவாமி கோயிலில் வழிபாடு செய்தனர்.

2013 முதல் உலகஅமைதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பஞ்சாபில் ஜெயின் மதத்துறவிகள் பாதயாத்திரை தொடங்கி நாடுமுழுக்க ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று ராமநாதபுரம் அருகே உச்சிபுளி பாம்பன்சுவாமிகள் ஆலயத்திற்கு ஜெயின் மதத்துறவி பங்கஜ்குரு தலைமையில் வந்தனர். துறவி தீப்சகர் கூறுகையில்,' ஏழு ஆண்டுகளாக ஆன்மிக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளோம்.

கர்நாடகா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் கன்னியாகுமரியில் கொரோனா பரவல் காரணமாக அதிகபட்சமாக 9 மாதம் தங்கிருந்தோம். தற்போது மதுரையிலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் வழிபட்டோம், எட்டுபேர் வந்துள்ளோம், நாளை (இன்று) ராமேஸ்வரம் செல்கிறோம். அங்கு 4 முதல் 5 நாட்கள் தங்குவோம் தொடர்ந்து ஆன்மிக பயணம் மேற் கொள்கிறோம்,'என்றார்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X