திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரே அளவு சிறப்பு நிதி ஒதுக்கப்படுவதால் வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை என ஊராட்சி தலைவர்கள் புலம்புகின்றனர்.
திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன.மக்கள் தொகை பரப்பளவிலும், அதிகளவு குக்கிராமங்களைக் கொண்டஊராட்சிகளான தில்லையேந்தல், மாயாகுளம், பெரியபட்டினம்,ரெகுநாதபுரம், லாந்தை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளாகும்.பெரிய ஊராட்சிகளுக்கு மக்கள்தொகை,பரப்பளவின் அடிப்படையில் இல்லாமல் ஒரே அளவிலான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வதால்,கூடுதல் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளதாகஊராட்சித்தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சித்தலைவர்கள் கூறியதாவது; 11 மாதங்களாக மத்திய அரசின்(எஸ்.எப்.சி.,) சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநில அரசின் சிறப்பு நிதியாக இருமுறை ஒரு லட்சம் வீதம் ஊராட்சிகளுக்குவழங்கப்பட்டது.ஒரே அளவு முறையை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை அதிகாரிகள் கடைப்பிடிப்பதால், அதிக குக்கிராமங்களை எண்ணிக்கையாக கொண்டஊராட்சிகள் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாமல்திணறி வருகின்றனர்.ஊராட்சியில் நிதிப்பற்றாக்குறைஏற்பட்டுள்ளதால்,அத்தியாவசியப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மக்கள் தொகை, கிராமங்களின் வருவாய், பரப்பளவு அடிப்படையில் கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE