கமுதி : கமுதி,அதனை சுற்றியுள்ள பகுதியில் விளைந்த சிறுதானிய பயிர்களை பிரிப்பதற்கு விவசாயிகள் சாலையை உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். கமுதி சுற்றுப்புற கிராமங்களில் சிறுதானிய பயிர்களான சோளம்,கம்பு,கேழ்வரகு,குதிரைவாலி அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்ட உலர்களங்கள் சேதமடைந்து இருந்த இடம் இல்லாமல் அழிந்து போனது.இதனால் விவசாயிகள் ஆபத்தை உணராமல் சாலையில் சிறுதானிய பயிர்களை உலர வைத்து துாற்றுக்கின்றனர்.சாலையில் பறக்கும் துாசு காரணமாக டுவீலரில் செல்லும் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE