ராமேஸ்வரம் : புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் சேதமடைந்த படகுகள் குறித்து இன்று (டிச.,29) மத்திய கண்காணிப்பு அறிக்கை குழு ஆய்வு செய்ய உள்ளனர்.
புரெவி புயலால் பாம்பன் குந்துகால் கடற்கரையில் நிறுத்தி இருந்த ராமேஸ்வரம் விசைப்படகுகளில் 40க்கும் மேலான படகுகள் சேதமடைந்தது. இதில் ஒரு படகை தவிர மற்ற படகுகள் மீட்கப்பட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்தனர். சேதமடைந்த படகிற்கு நிவாரணம் வழங்கிட கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் புரெவி புயலில் பாதித்த பகுதியை மத்திய கண்காணிப்பு அறிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் மத்திய இணை செயலர் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தனர். இன்று இக்குழு, பாம்பன் குந்துகால் கடற்கரையில் மூழ்கி கிடக்கும் படகை ஆய்வு செய்து ராமேஸ்வரம், மண்டபத்தில் சேதமடைந்த படகின் உரிமையாளர்களை சந்தித்து, அப்பகுதியை பார்வையிட உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE