பொது செய்தி

தமிழ்நாடு

மன்னார் கடலில் கவுக்கான் மீன் சீசன்: மீனவர்கள் ஆர்வம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் கவுக்கான் மீன்வரத்து சீசன் துவங்கியதால், மீனவர்கள் ஆர்வமுடன் மீன்பிடித்து வருகின்றனர். வடகிழக்கு பருவ காற்று வீசுவதால் தற்போது பாக்ஜலசந்தி கடலில் கொந்தளிப்பும், ராட்சத அலைகள் எழுகிறது. இதனால் தனுஷ்கோடி மீனவர்கள் வடக்கு கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, டிச., முதல் மார்ச் வரை மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிப்பது
 மன்னார் கடலில் கவுக்கான் மீன் சீசன்: மீனவர்கள் ஆர்வம்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் கவுக்கான் மீன்வரத்து சீசன் துவங்கியதால், மீனவர்கள் ஆர்வமுடன் மீன்பிடித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவ காற்று வீசுவதால் தற்போது பாக்ஜலசந்தி கடலில் கொந்தளிப்பும், ராட்சத அலைகள் எழுகிறது. இதனால் தனுஷ்கோடி மீனவர்கள் வடக்கு கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, டிச., முதல் மார்ச் வரை மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிப்பது வழக்கம். தற்போது ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகில் மன்னார் கடலில் மீன்பிடிக்கின்றனர். இதில் கொழுப்பு சத்து குறைந்த ருசி மிகுந்த கவுக்கான் மீன்வரத்து அதிகரித்து உள்ளதால், மீனவர்கள் அதற்கான பிரத்யேக வலையை வடிவமைத்து மீன்பிடிக்க செல்கின்றனர்.

இதில் ஒரு படகிற்கு தலா 20 முதல் 50 கிலோ வரை கவுக்கான் மீன்கள் சிக்குகிறது. இம்மீனை ஒரு கிலோ ரூ.300க்கு ராமேஸ்வரம் வியாபாரிகள் வாங்கி பதப்படுத்தி கோவை, கேளராவுக்கு அனுப்புகின்றனர். புரெவி புயலால் இந்தாண்டு சீசனில் கவுக்கான் வரத்து அதிகரித்து, கூடுதல் வருவாய் கிடைத்தது என தனுஷ்கோடி மீனவர்கள் தெரிவித்தனர்.தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் கவுக்கான் மீன் பிடிக்கும் வலைகளை சரி செய்த மீனவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X