பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி நடுவே மின் கோபுரத்தில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர்கள்

Added : டிச 29, 2020
Share
Advertisement
உத்திரமேரூர்; நிரம்பி வழியும் உத்திரமேரூர் சிற்றேரிக்குள் நீந்திச் சென்று, உயர் கோபுர மின்கம்பத்தின் மீது ஏறி, சாகசம் செய்யும் இளைஞர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வடகிழக்கு பருவமழை மற்றும் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, உத்திரமேரூர் சிற்றேரி நிரம்பி, உபரி நீர், கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது.உபரி நீர் வெளியேறுவதைக் காண வருவோர், ஆபத்தான

உத்திரமேரூர்; நிரம்பி வழியும் உத்திரமேரூர் சிற்றேரிக்குள் நீந்திச் சென்று, உயர் கோபுர மின்கம்பத்தின் மீது ஏறி, சாகசம் செய்யும் இளைஞர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.வடகிழக்கு பருவமழை மற்றும் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, உத்திரமேரூர் சிற்றேரி நிரம்பி, உபரி நீர், கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது.உபரி நீர் வெளியேறுவதைக் காண வருவோர், ஆபத்தான முறையில் கலங்கலில் குளிப்பதும், ஏரியில் இறங்கி, மொபைலில், 'ஷெல்பி' எடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், இளைஞர்கள் சிலர், சிற்றேரி ஏரிக்குள் நீந்திச் சென்று, ஆபத்தான முறையில், உயர் கோபுர மின்கம்பங்களின் மீது ஏறி, விளையாடி வருகின்றனர். கம்பத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் இளைஞர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, பொதுமக்கள் ஏரிக்குள் இறங்குவதைத் தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X