சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவல் துறை அலட்சியத்தால் பாலாற்றில் தொடரும் பலி

Added : டிச 29, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் போலீசாரின் அலட்சியத்தால், பாலாற்று தண்ணீரில் மூழ்கி, இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு பெய்த பருவ மழையால், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, 'பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது' என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் போலீசாரின் அலட்சியத்தால், பாலாற்று தண்ணீரில் மூழ்கி, இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு பெய்த பருவ மழையால், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக, 'பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது' என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.வெள்ளம் ஓடிய முதல் சில நாட்களில், ஆற்றில் யாரையும் இறங்கவிடாமல், போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின், அப்பணியில் அவர்கள் ஈடுபடவில்லை.இதனால், காஞ்சிபுரம், தும்பவணம் பகுதியைச் சேர்ந்த பூரணி, ஜெயஸ்ரீ, லட்சுமி என, மூன்று சிறுமியர், கடந்த மாதம், ஓரிக்கை பாலாற்று பகுதியில் குளித்தபோது, ஆற்று பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இறந்தனர்.தொடர்ந்து, ஓரிக்கை பாலாற்று மேம்பாலத்திற்கு கீழ், ஆழமான இடத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, சிறுவன் இறந்தான்.இதுபோல், ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்களை தடுக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நம் நாளிதழில், ஆபத்தான இடத்தில் சிறுவர்கள் குளிக்கும் படம், கடந்த வாரம் பிரசுரமாக்கப்பட்டது.அப்போதே உஷாராக வேண்டிய காவல் துறையினர், அலட்சியமாக நடந்து கொண்டனர். இதன் காரணமாக, சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலாஜி, 18, என்பவர், நண்பர்களுடன் குளிக்கும்போது, பாலாற்று நீரில் மூழ்கி, நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவதுஆற்றில் குளிக்க செல்லும் சிறுவர்களை, நாங்கள் தடுத்தாலும் கேட்பதில்லை. வேறு வழியாக ஆற்றுக்கு சென்று விடுகின்றனர். இதனால், ஆற்றில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால், அவர்கள் அவ்வாறு செல்லமாட்டார்கள். காவல் துறை, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X