திருப்போரூர்; முட்டுக்காடு படகு குழாமில், சுற்றுலா பயணியரின் வசதிக்காக, ஆறு புதிய துடுப்பு படகுகள் வாங்கப்பட்டு உள்ளன.திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காட்டில், நீர் விளையாட்டு மையமாக, படகு குழாம் உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால், 1984ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது.இந்த படகு குழாம் ஆழம், 3 அடி முதல் 6 அடி வரை உள்ளது. இங்கு, தினசரி மற்றும் வார விடுமுறை, கோடை விடுமுறை, பண்டிகை நாளில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்து, படகு சவாரி செய்வர்.துடுப்பு படகு, 10 உட்பட இயந்திர படகு, விரைவு படகு, வாட்டர் ஸ்கூட்டர் என, 37 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சுற்றுலா பயணியரின் வசதிக்காகவும், மேம்பாட்டிற்காகவும், நான்கு இருக்கை உடைய, ஆறு புதிய துடுப்பு படகுகள், சுற்றுலா துறை சார்பில் வாங்கப்பட்டு உள்ளன.இந்த படகுகள், நேற்று முன்தினம் முதல், சுற்றுலா பயணியரின் வசதிக்காக, இயக்கப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE