பொது செய்தி

தமிழ்நாடு

செவ்வாடை பக்தர்கள் மாமல்லை படையெடுப்பு

Added : டிச 29, 2020
Share
Advertisement
மாமல்லபுரம்; மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்கள், மாமல்லபுரம் சுற்றுலாவிற்கு குவிகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. பக்தர்களிடம் மிகவும் பிரசித்த பெற்ற இக்கோவிலில், சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் ஆகிய உற்சவங்களின்போது, பக்தர்கள், வழிபட குவிகின்றனர்.ஜன., 28ல், தைப்பூச உற்சவம் நடைபெற உள்ள

மாமல்லபுரம்; மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்கள், மாமல்லபுரம் சுற்றுலாவிற்கு குவிகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில், சித்தர் பீட ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. பக்தர்களிடம் மிகவும் பிரசித்த பெற்ற இக்கோவிலில், சித்திரை பவுர்ணமி, தைப்பூசம் ஆகிய உற்சவங்களின்போது, பக்தர்கள், வழிபட குவிகின்றனர்.ஜன., 28ல், தைப்பூச உற்சவம் நடைபெற உள்ள நிலையில், தமிழக, ஆந்திர, கர்நாடக பக்தர்கள், வழிபாட்டிற்காக, தற்போதே வர துவங்கி உள்ளனர். கடலில் நீராடிய பிறகே, இக்கோவிலில் வழிபடுவது வழக்கம்.எனவே, மாமல்லபுரத்தில், செவ்வாடையுடன் குவிந்து, கடலில் நீராடி, கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர். கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளில், வியாபாரம் களைகட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X