மாமல்லபுரம்; நகராட்சி பகுதிகளில் இயங்கும், முடி திருத்தகம் உள்ளிட்டவை, உரிமம் பெற, நகராட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.நகராட்சி பகுதியில், முடி திருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் ஆகியவை இயங்குகின்றன.இவை, 1920ம் ஆண்டு, தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி, நகராட்சி நிர்வாக உரிமம் பெற்றே இயங்க வேண்டும். பல பகுதிகளில், உரிமம் பெறாமல் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இவற்றை நடத்துவோர், தொழில் நடைமுறை கருதி, நகராட்சி நிர்வாகத்திடம், விண்ணப்பம் பெற்று, உரிமம் பெற வேண்டும்.தவறினால், கடைக்கு, 'சீல்' வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE