சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பானிபூரிக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு வெட்டு

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருவொற்றியூர்; சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட ஆத்திரத்தில், கடைக்காரரை கத்தியால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விரேந்தர்பால், 35. கிராமத்தெரு சந்திப்பில், பானிபூரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த மூவர், பானிபூரி சாப்பிட்டனர்.பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர்.

திருவொற்றியூர்; சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட ஆத்திரத்தில், கடைக்காரரை கத்தியால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விரேந்தர்பால், 35. கிராமத்தெரு சந்திப்பில், பானிபூரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த மூவர், பானிபூரி சாப்பிட்டனர்.பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். சுதாரித்த விரேந்தர் பால், பணம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், கடைக்காரரின் தாடையில் வெட்டி தப்பினர்.காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ஆறு தையல் போடப்பட்டது.திருவொற்றியூர் போலீசார், ஓசி பானிபூரிக்கு பிரச்னை செய்த, திருவொற்றியூர், கிராமத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், 24, தியாகராஜன், 21, ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X