காசிமேடு; மீனவரை கத்தியால் வெட்டி, மொபைல் பறித்த கும்பல், அடுத்தடுத்து மூவரிடம் மொபைல் பறித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை, காசிமேடைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; மீனவர். நேற்று முன்தினம் இரவு, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் பறித்துச் சென்றனர்.பின், அந்த கும்பல், திடீர் நகர் சாலையோரம்நின்றிருந்த மீனவரான ராமச்சந்திரன், 32, என்பவரிடம், கத்தியை காட்டி மொபைலை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல், கத்தியால் அவர் கையில் வெட்டி, போனை பறித்து தப்பினர்.காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதேபோன்று, சூரியநாரயணா சாலை, பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த வாலிபரிடம், அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் பறித்துள்ளது.மூன்று சம்பவங்கள் குறித்தும், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவம் நிகழ்ந்த பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் ஏதுமில்லாததால், வழிப்பறி கும்பலை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE