வண்ணாரப்பேட்டை -- திருவெற்றியூர் விம்கோ நகர் இடையே உள்ள மெட்ரோ நிலையங்களுக்கு, நிலைய கட்டுப் பாட்டாளர்களாக, 24 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.சென்னை வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே, 3,770 கோடி ரூபாய் செலவில், 9.1 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இப்பாதையில், எட்டு நிலையங்கள் உள்ளன. தியாகராயா கல்லுாரி, கொருக்குப்பேட்டை நிலையங்கள் சுரங்கத்தில் கட்டப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி,தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் நிலையங்கள், தரைக்கு மேல் கட்டப்பட்டுள்ளன. இப்பாதையில், பயணியர் போக்குவரத்துக்கு தேவையான அத்தியாவசிய கட்டுமான பணிகள் முடிந்ததால், வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை, நேற்று முன்தினம், மெட்ரோ ரயில், இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ரயில் சோதனை ஓட்டமும், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனையும் நடக்க உள்ளது. ஜனவரி இறுதியில், இப்பாதையில் பயணியர் ரயில் இயக்கப்பட உள்ளது.இதனால், இப்பாதையில் உள்ள எட்டு நிலையங்களும், மூன்று ஷிப்டுகள் பணியாற்ற ஏதுவாக, 24 பேர் நிலைய கட்டுப்பாட்டாளர்களாக, நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினம் நிலையத்துக்கு வந்து செல்லும் சோதனை ரயில், நிலையத்தில் நடக்கும் பணிகள், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடு, திட்ட அதிகாரிகளின் வருகை குறித்து, பணி விபர பட்டியல் தயாரிக்க பணிக்கப்பட்டுள்ளது.இப்பட்டியல், சென்னை கோயம்பேடில் உள்ள, மெட்ரோ ரயில் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர்- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE