பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு

Added : டிச 29, 2020
Share
Advertisement
போரூர்; கொரோனா ஊரடங்கின் போது, தன்னலம் கருதாமல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, போரூர் மக்கள் பாராட்டு விழா நடத்தினர். கொரோனா பரவலை தடுக்க, சுகாதார துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, துாய்மை பணியாளர்கள் என, அனைத்து அரசு ஊழியர்களும் அயராது பணியாற்றினர்.அவர்களை, பொதுமக்கள் ஆராத்தி எடுத்தும், கவுரவித்தும் வருகின்றனர். நேற்று, போரூர் மக்கள், அவர்களது பகுதியில் சிறப்பாக

போரூர்; கொரோனா ஊரடங்கின் போது, தன்னலம் கருதாமல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, போரூர் மக்கள் பாராட்டு விழா நடத்தினர். கொரோனா பரவலை தடுக்க, சுகாதார துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, துாய்மை பணியாளர்கள் என, அனைத்து அரசு ஊழியர்களும் அயராது பணியாற்றினர்.அவர்களை, பொதுமக்கள் ஆராத்தி எடுத்தும், கவுரவித்தும் வருகின்றனர். நேற்று, போரூர் மக்கள், அவர்களது பகுதியில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழாவை, தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினர்.இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி, அரசு ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.மேலும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த கண் பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 50 பேருக்கு தலா, 5,000 ரூபாய் உதவி தொகை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X