சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருவொற்றியூர்; சரக்கு பெட்டக முனையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நீக்கத்தை கண்டித்து, குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சென்னை, திருவொற்றியூர், இந்திரா நகரில், மத்திய அரசுக்கு சொந்தமான, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. இங்கு, நிரந்தர ஊழியர்கள் தவிர, ஒப்பந்த முறையில், 30 ஆண்டுகளாக, 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.இந்நிலையில், ஒப்பந்தம்

திருவொற்றியூர்; சரக்கு பெட்டக முனையத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நீக்கத்தை கண்டித்து, குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சென்னை, திருவொற்றியூர், இந்திரா நகரில், மத்திய அரசுக்கு சொந்தமான, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. இங்கு, நிரந்தர ஊழியர்கள் தவிர, ஒப்பந்த முறையில், 30 ஆண்டுகளாக, 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.இந்நிலையில், ஒப்பந்தம் மாறியதால், கிரேன், மிஷின் ஆப்பரேட்டர், உதவியாளர் பிரிவில் வேலை பார்த்த, 52 ஊழியர்களை, திடீரென வேலையில் இருந்து நீக்கி, புதிய ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தியுள்ளனர்.வேலையிழந்த தொழிலாளர்கள், மூன்று தினங்களாக வேலை கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன்படி, ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன், நேற்று காலை, நிறுவன வாயிற்கதவு முன், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வேலை வழங்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என, அவர்கள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X