பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றவர்கள் உடல் அடக்கம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
சைதாப்பேட்டை; சாலை ஓரம் சடலமாக கிடந்த இரண்டு ஆதரவற்றவர்கள் உடலை, தன்னார்வலர்கள் உதவியுடன், போலீசார் மயானத்தில் அடக்கம் செய்தனர்.சைதாப்பேட்டை, மகாவீர் தெருவில், நவ., 21ம் தேதி, 45 வயது மதிக்கத்தக்க பெண், வலிப்பு வலியால் இறந்தார். கடந்த, 9ம் தேதி, 50 வயது ஆண், அதே பகுதியில் சடலமாக கிடந்தார்.இரண்டு பேரின் பெயர், முகவரி தெரியவில்லை. பொதுமக்கள் வழங்கும் பொருளுதவியில் வாழ்ந்து

சைதாப்பேட்டை; சாலை ஓரம் சடலமாக கிடந்த இரண்டு ஆதரவற்றவர்கள் உடலை, தன்னார்வலர்கள் உதவியுடன், போலீசார் மயானத்தில் அடக்கம் செய்தனர்.சைதாப்பேட்டை, மகாவீர் தெருவில், நவ., 21ம் தேதி, 45 வயது மதிக்கத்தக்க பெண், வலிப்பு வலியால் இறந்தார். கடந்த, 9ம் தேதி, 50 வயது ஆண், அதே பகுதியில் சடலமாக கிடந்தார்.இரண்டு பேரின் பெயர், முகவரி தெரியவில்லை. பொதுமக்கள் வழங்கும் பொருளுதவியில் வாழ்ந்து வந்தனர். உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.சைதாப்பேட்டை போலீசார், இரு உடலையும் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி, அவர்கள் குறித்து விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காததால், இரண்டு பேருக்கும் இறுதி சடங்கு செய்ய, போலீசார் முடிவு செய்தனர்.நேற்று முன்தினம், காவலர் அனுராஜ் மற்றும் சமூக சேவகி ரோஜா உள்ளிட்டோர் சேர்ந்து, இருவரது உடலை, சைதாப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்தனர்.அப்போது, இறுதி சடங்கின் போது செய்யும் அனைத்து சடங்குகளும் செய்து, அடக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X