பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கையருக்கு விழிப்புணர்வு

Added : டிச 29, 2020
Share
Advertisement
மாதவரம்; 'திருநங்கையர், குற்ற புகார்களில் சிக்குவதை தவிர்த்து, சுயதொழில் மற்றும் உரிய வேலை வாய்ப்பு மூலம், மறுவாழ்வு பெற வேண்டும்' என, விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தினர்.சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், திருநங்கையருக்கான விழிப்புணர்வு கூட்டம், நேற்று காலை நடந்தது. அதில், மாதவரம் காவல் அதிகாரிகள்

மாதவரம்; 'திருநங்கையர், குற்ற புகார்களில் சிக்குவதை தவிர்த்து, சுயதொழில் மற்றும் உரிய வேலை வாய்ப்பு மூலம், மறுவாழ்வு பெற வேண்டும்' என, விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தினர்.சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில், மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், திருநங்கையருக்கான விழிப்புணர்வு கூட்டம், நேற்று காலை நடந்தது. அதில், மாதவரம் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது, அவர்கள், 'மாதவரம் காவல் மாவட்ட எல்லைகளின் நெடுஞ்சாலைகளில் வலம் வரும் திருநங்கையர் மீது, பல்வேறு புகார்கள் எழுகின்றன. நீங்கள், அவற்றை தவிர்த்து, சுயதொழில் மற்றும் பொது நல அமைப்புகள் மூலம், உரிய வேலை வாய்ப்புகளை பெற்று, பாதுகாப்பான வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.அதற்கு, திருநங்கையர், 'பெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட நாங்கள், வேறு வழியின்றி, மற்றவர்களிடம்உதவி கேட்கும் நிலைக்கு ஆளாகி உள்ளோம்.'பொதுமக்களும், மனிதாபிமானமின்றி எங்களை நடத்துகின்றனர். எங்களையும் மனிதராக மதித்து, ஏதாவது வேலை வாய்ப்பு வழங்கினால், உழைக்க தயாராக இருக்கிறோம்' என, உருக்கமாக உறுதி அளித்தனர். போலீசார், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X