சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட்: திருவாரூர் நபர் கைது

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை; துபாய்க்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல வந்தவரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சென்னையிலிருந்து நேற்று அதிகாலை, ஐக்கிய அரபு நாடான, துபாய் நகருக்கு செல்லும் சிறப்பு, 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, திருவாரூரைச் சேர்ந்த சையத் முகமது, 35, என்பவரின் பாஸ்போர்ட்டை,

சென்னை; துபாய்க்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல வந்தவரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சென்னையிலிருந்து நேற்று அதிகாலை, ஐக்கிய அரபு நாடான, துபாய் நகருக்கு செல்லும் சிறப்பு, 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, திருவாரூரைச் சேர்ந்த சையத் முகமது, 35, என்பவரின் பாஸ்போர்ட்டை, குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அவரது பாஸ்போர்ட் போலியானது என, தெரிந்தது.அவரிடம் நடந்த விசாரணையில், வேறு ஒருவரது பாஸ்போர்ட்டில், புகைப்படத்தை மாற்றி, போலி பாஸ்போர்ட்டில், துபாய் செல்ல முயன்றது தெரிந்தது.சையத் முகமது கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X