சென்னை - சேலத்தில், பிப்ரவரி, 6ல், 1 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடத்தவும், நிகழ்ச்சிக்கு பிரதமரை அழைக்கவும், தமிழக பா.ஜ., இளைஞர் அணி முடிவு செய்துள்ளது.தமிழக பா.ஜ., மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், கமலாலயத்தில் நடந்தது. மாநில இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி செல்வம், தலைமை வகித்தார்.கூட்டத்தில், சட்டசபை தேர்தலையொட்டி, சேலத்தில், பிப்ரவரி, 6ல், ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் பேரணியை நடத்துவது; பேரணிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அழைப்பது என, முடிவு செய்யப்பட்டது.மேலும், பிரதமரையும், ஹிந்து மதத்தையும், தரக்குறைவாக விமர்சித்த, எஸ்றா சற்குணத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என, மாநில தலைமையை வலியுறுத்துவது; குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து, அவற்றை வழங்கும்படி கேட்பது என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிதிக்குழு அறிவிப்பு!தமிழக பா.ஜ.,வின், மாநில நிதிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிக்குழு தலைவராக மாநில தலைவர் முருகன், துணைத் தலைவராக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர்த்து, மேலும், 22 உறுப்பினர்களும், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE