சென்னை - சைதாப்பேட்டை கிளை சிறையில், மர்மமான முறையில் இறந்த கைதியின் உடல், மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.சென்னை, திருவல்லிக்கேணி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 38; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு, பிரபா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.சிறையில் அடைப்புமகாலிங்கம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக, ஐஸ்ஹவுஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர், இம்மாதம், 10ம் தேதி, மர்மான முறையில் இறந்தார். மகாலிங்கத்தின் உடல், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால், கணவரின் உடலை வாங்க மறுத்த பிரபா மற்றும் அவரது உறவினர்கள், மகாலிங்கத்தை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டம்டிச., 8ம் தேதி, சிறையில் கணவரை சென்று பார்த்தபோது, தாடை, வாய் மற்றும் முதுகு என, பல இடங்களில் காயம் இருந்ததாகவும், கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுடன் பிரபா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும், சைதாப்பேட்டை நீதித்துறை நடுவருக்கு கோரிக்கை மனு அளித்தார். வழக்கு பதிவுஅதில், 'என் கணவர் திடகாத்திரமானவர். அவரது உடலை, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, என் சார்பிலான மருத்துவர் மற்றும் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும். 'பிரேத பரிசோதனையை, வீடியோ பதிவு செய்ய வேண்டும். என் கணவரின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மோகனம்பாள், 'மனுதாரரின் மருத்துவருடன், மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.பரபரப்புசென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று காலை, 11:30 மணிமுதல் மதியம், 1:00 மணி வரை, மோகனம்பாள் முன்னிலையில், மகாலிங்கத்தின் உடலை, ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த இருவர், மேலும் இருவர், பிரபா சார்பில் ஒருவர் என, ஐந்து மருத்துவர்கள், மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த அறிக்கை வெளிவந்த பின்னரே, மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். இந்த சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE