பேசின்பாலம் - யார் பெரியவன் என்ற போட்டியில், பழிக்குப் பழியாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.சென்னை, கொருக்குபேட்டை, அம்பேத்கர் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 35; தனியார் நிறுவன ஊழியர்.அவர், நேற்று மதியம், 1:20 மணி அளவில், பேசின்பாலம், டிமலஸ் சாலை, குமாரசாமி ராஜாபுரம், முத்துமாரியம்மன் கோவில் அருகில் வசிக்கும், தன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை, பட்டா கத்திகளால், சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, ஆட்டோவில் தப்பியது.தகவலறிந்த பேசின்பாலம் போலீசார், சிலம்பரசனின் சடலத்தை மீட்டனர். விசாரணையில், கொருக்குபேட்டை, 5வது தெருவில் வசித்த விஜயன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளிக்கும், 4வது தெருவைச் சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும், அந்த பகுதியில், யார் பெரியவன் என்ற போட்டி காரணமாக, அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், செப்டம்பரில், விஜயன் உடல் நலமின்றி இறந்தார். ஆனாலும், அவரது குடும்பத்தை பழி தீர்க்கும் வகையில், விஜயனின் மகன் பாலசுப்ரமணியத்தை, 30, நவம்பரில் அன்பரசன் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட, ஏழு பேர் சேர்ந்து வெட்டிக் கொன்றனர்.இந்த வழக்கில், ஆர்.கே.நகர் போலீசார், அவர்களை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.அதனால், பாலசுப்ரமணியின் கொலைக்கு பழி வாங்கும் முடிவில், அவரது குடும்பத்தினர், சிறையில் இருக்கும் அன்பரசனின் அண்ணன் சிலம்பரசனை, நேற்று கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.கொலையாளிகளை, பேசின்பாலம் போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE