தாலுகா அலுவலக ரோட்டில்கடும் நெரிசல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நெரிசல் மிக்க தாலுகா அலுவலக ரோட்டில், பெரும்பாலான ரோடு போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளதால், கடும் நெரிசல் நிலவுகிறது.பொள்ளாச்சி நகர எல்லைக்குட்பட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இத்திட்டம், வரவேற்க கூடியதாக இருந்தாலும், செயல்படுத்தும் முறையில் உள்ள
 தாலுகா அலுவலக ரோட்டில்கடும் நெரிசல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நெரிசல் மிக்க தாலுகா அலுவலக ரோட்டில், பெரும்பாலான ரோடு போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளதால், கடும் நெரிசல் நிலவுகிறது.பொள்ளாச்சி நகர எல்லைக்குட்பட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இத்திட்டம், வரவேற்க கூடியதாக இருந்தாலும், செயல்படுத்தும் முறையில் உள்ள சிக்கல்களால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.ரோடு பணிக்காக, தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன. தற்போது, சுற்றுச்சுவர்கள், அதையொட்டிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.அதனால், சாக்கடை கழிவுநீர், ரோட்டோரம் விடப்படுகிறது. இதுவே ரோட்டின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்து விடுகிறது. அதையடுத்து, ரோட்டில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பணிக்கு முன், தாசில்தார் அலுவலக வளாகத்தினுள் வாகன நிறுத்தம் இருந்தது. தற்போது, அதற்கு வழியில்லாததால், ரோட்டின் கணிசமான பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.ரோட்டின் பெரும்பகுதி போக்குவரத்துக்கு லாயகற்றதாக மாறியுள்ளதால், காலை முதல் இரவு வரை தாசில்தார் அலுவலக ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.ரோடு விரிவாக்க பணி நடப்பது ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இது போன்ற சூழல்களை கையாளவும், மாற்று ஏற்பாடு செய்யவும் நகர நிர்வாகம் மற்றும் போலீசார் திட்டமிட்டிருக்க வேண்டும். அவ்வாறு, மாற்று ஏற்பாடு செய்யாததால் மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X