பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு நிலக்கடலை ரகங்களே சிறந்தவை! விவசாயிகள் பயிற்சி முகாமில் தகவல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஒருங்கிணைந்த நிலக்கடலை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், நிலக்கடலை சாகுபடி பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி புரவிபாளையத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீனா வரவேற்றார்.தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரனீதா பேசியதாவது:எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை சாகுபடி, இந்தியாவில் அதிக
 ஆழியாறு நிலக்கடலை ரகங்களே சிறந்தவை! விவசாயிகள் பயிற்சி முகாமில் தகவல்

பொள்ளாச்சி:ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஒருங்கிணைந்த நிலக்கடலை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், நிலக்கடலை சாகுபடி பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி புரவிபாளையத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீனா வரவேற்றார்.தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரனீதா பேசியதாவது:எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை சாகுபடி, இந்தியாவில் அதிக பரப்பளவில் நடக்கிறது. குறிப்பாக, தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், கடந்த, 50 ஆண்டுகளாக தேசிய அளவிலான நிலக்கடலை ஆராய்ச்சி நடக்கிறது. இங்கு வெளியிடப்பட்ட ரகங்கள் மிகச்சிறந்தவை. வண்டல், செம்மண் மண் நிலத்துக்கு ஏற்றவையாகும்.வேளாண் பல்கலையின் நுண்உரக்கலவையை ெஹக்டேருக்கு, 12.5 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரமாக அளிக்க வேண்டும்.செடிகளில் பூக்களை தக்க வைத்தல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்க, பூக்கும் தருணம் மற்றும் காய் முற்றும் பருவத்தில் மருந்து தெளிக்க வேண்டும்.இரண்டாம் கைக்களை எடுத்த பின், ஜிப்சம் - 400 கிலோ ெஹக்டேருக்கு இட்டு, மண் அணைப்பது நிலக்கடலை சாகுபடியில் முக்கிய நடவடிக்கையாகும். மேலும், காய்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ஊட்டச்சத்து கலவை தெளிப்பதும் முக்கியம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.பேராசிரியர் மீனா பேசுகையில், ''நுண்ணுயிரிகளான ரைசோபியத்தை, அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், டிரைகோடெர்மா எதிர் உயிரி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம். இதனால், நோய்களை கட்டுப்படுத்துவதோடு, விளைச்சலையும் அதிகரிக்கலாம்'' என்றார்.நிலக்கடலை ரகங்கள், மண் மற்றும் உரமேலாண்மை, நோய், பூச்சி மேலாண்மை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு ஆகியன குறித்து, பேராசிரியர்கள் சிவகுமார், சுதாலட்சுமி, ராஜேஸ்வரி, அழகர் ஆகியோர் விளக்கினர்.பயிற்சியில் பங்கேற்ற, 70 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடிக்கான இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வேளாண் கண்காணிப்பாளர் சரவணகுமார் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X