மாநில வலு தூக்கும் போட்டி: எஸ்.டி.சி., மாணவர்கள் வெற்றி

Added : டிச 29, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:மாநில அளவிலான வலு துாக்கும் போட்டியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.மாநில அளவிலான ஜூனியர், சப் - ஜூனியர், சீனியர் வலுதுாக்கும் போட்டிகள், ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. கோவை மாவட்டத்தின் சார்பில், பங்கேற்ற பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் அஸ்வல்ட் பிரவீன்ராஜ், சப் -ஜூனியர் பிரிவின், 120 கிலோ

பொள்ளாச்சி:மாநில அளவிலான வலு துாக்கும் போட்டியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.மாநில அளவிலான ஜூனியர், சப் - ஜூனியர், சீனியர் வலுதுாக்கும் போட்டிகள், ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. கோவை மாவட்டத்தின் சார்பில், பங்கேற்ற பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் அஸ்வல்ட் பிரவீன்ராஜ், சப் -ஜூனியர் பிரிவின், 120 கிலோ எடைப்பிரிவில் முதல் இடத்தையும்; ஜூனியர் பிரிவின், 120 கிலோ எடைப்பிரிவில், சஞ்சய்குமார் முதல் இடத்தையும் பெற்றனர்.ஜூனியர் பிரிவின், 59 கிலோ எடைப்பிரிவில், மாணவன் சாஜித் இரண்டாம் இடத்தையும்; 74 கிலோ எடை பிரிவில், கோகுல் மாணிக்கம் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரும், 2021 பிப்., மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும், வலு துாக்கும் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலாளர் வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் சோமு, உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X