உடுமலை;கால்நடைகளுக்கு பரவி வரும் நோய்த்தாக்குதல் குறித்து, உடுமலை பகுதி கிராமங்களில், கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிகிச்சை வழங்கினர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. சமீபத்தில், பொள்ளாச்சி பகுதியில், துவங்கிய, மாட்டம்மை நோய்த்தாக்குதல், மாவட்ட எல்லை கிராமங்களிலும், பரவியது. இதனால், அதிகளவு கால்நடைகள் பாதித்து, பால் உற்பத்தி, குறைந்தது.வேகமாக பரவி வரும், இந்நோய்த்தாக்குதலை, கட்டுப்படுத்த, கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்காததால், கால்நடை வளர்ப்போர், அதிருப்தியில், உள்ளது குறித்து, 'தினமலரில்' செய்தி வெளியானது.இதையடுத்து, பெதப்பம்பட்டி கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட, கொங்கல்நகரம், புதுப்பாளையம் உட்பட கிராமங்களில், டாக்டர் மாரீஸ்வரன், தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்; விழிப்புணர்வு பணிகளில், ஈடுபட்டனர்.கால்நடைத்துறையினர் கூறியதாவது: உடுமலை வட்டாரத்திலுள்ள, கால்நடைகளுக்கு, 'இலம்பி' எனப்படும், தோல் நோய் பரவல், ஏற்பட்டுள்ளது.இந்த நோயானது, வைரஸ் நச்சுயிரியால், ஏற்படும், அம்மை வகையை சார்ந்த நோய் ஆகும். கொசு, உண்ணி, ஈ, மற்றும் பாதிக்கப்பட்ட மாடு வாயிலாக இந்த நோய் பரவுகிறது. கன்றுக்குட்டிகள் பாதிக்கப்பட்ட மாட்டின், பாலை, அருந்தும் போது, நோய்த்தொற்று ஏற்படுகிறது.கொட்டகை, பால் கறவை முறை, சுத்தமான மாடு ஆகியவை மட்டுமே, இந்த நோய்த்தொற்றில், இருந்து, கறவை மாடுகளை காப்பாற்றும். மேலும், விபரங்களுக்கு, அருகிலுள்ள, கால்நடை கிளை நிலையத்தை அணுகலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.நோய்த்தடுப்பு முறைகள் குறித்த நோட்டீஸ்களை, கிராமப்பகுதிகளில், கால்நடைத்துறையினர் வினியோகித்தனர். கொங்கல்நகரம் உட்பட ஊராட்சி நிர்வாகிகளிடம், நோய்த்தாக்குதல், குறித்த, நோய்த்தடுப்பு குறித்த தகவல்களை உள்ளடக்கிய, நோட்டீஸ்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினர்.மேலும், கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கு, இலவச ஆம்புலன்ஸ் சேவையை, 1962 என்ற எண்ணில், தொடர்பு கொண்டு, உடுமலை வட்டார கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE