வால்பாறை:வால்பாறையில், தொழிலாளர் வெளியேற்றத்தால், நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.வால்பாறையில், தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வந்தனர்.கடந்த 2001ம் ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம், 72 ரூபாயாக குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட் வேலையை விட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட எஸ்டேட் நிர்வாகங்கள், தற்போது வெளிமாநிலத் தொழிலாளர்களை வரவழைத்து, தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.இருப்பினும், சீசன் காலங்களில் தேயிலை முழுமையாக பறிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது, ஜப்பான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, தேயிலை பறிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 30 தொழிலாளர் செய்யும் பணியை இயந்திரத்தை பயன்படுத்தி செய்யலாம். சமமட்டமான தேயிலை எஸ்டேட்டில் மட்டுமே, இயந்திரத்தை பயன்படுத்த முடியும். இதனால், பிற இடங்களில் தொழிலாளர்கள் கத்திரி வெட்டால் தேயிலையை பறிக்கின்றனர்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE