பொது செய்தி

தமிழ்நாடு

இதெல்லாம் அநியாயம்!ஆளுக்கும், வாகனத்துக்கும் நுழைவு கட்டணம்:வால்பாறையை தனிமைப்படுத்தும் வனத்துறை

Added : டிச 29, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;'வால்பாறை போறீங்களா, 'என்ட்ரி பீஸ்' கட்டிட்டு போங்க' என, ஆழியாறு சோதனைச்சாவடியில அதிகாரி ஒருத்தரு சொல்றாரு. பைக்கில் சென்ற இளைஞர், 'சார், நான் ஆழியாறு தான், வால்பாறையில அண்ணன் வீட்டுக்கு போறோன். 'டூர்' வர்றவங்க தான் 'என்ட்ரி பீஸ்' கட்டுவாங்க, நான் இந்த ஊரு காரன் தான்,' என கூறியதும், 'அதெல்லாம் பழசு; இப்ப புது உத்தரவு போட்டிருக்காங்க, 'என்ட்ரி' பீஸ்
 இதெல்லாம் அநியாயம்!ஆளுக்கும், வாகனத்துக்கும் நுழைவு கட்டணம்:வால்பாறையை தனிமைப்படுத்தும் வனத்துறை

பொள்ளாச்சி;'வால்பாறை போறீங்களா, 'என்ட்ரி பீஸ்' கட்டிட்டு போங்க' என, ஆழியாறு சோதனைச்சாவடியில அதிகாரி ஒருத்தரு சொல்றாரு. பைக்கில் சென்ற இளைஞர், 'சார், நான் ஆழியாறு தான், வால்பாறையில அண்ணன் வீட்டுக்கு போறோன். 'டூர்' வர்றவங்க தான் 'என்ட்ரி பீஸ்' கட்டுவாங்க, நான் இந்த ஊரு காரன் தான்,' என கூறியதும், 'அதெல்லாம் பழசு; இப்ப புது உத்தரவு போட்டிருக்காங்க, 'என்ட்ரி' பீஸ் கட்டினா, வால்பாறைக்கு போலாம்,' என்றார் வனஅதிகாரி. இப்படித்தான் தினமும் ஆழியாறு சோதனைச்சாவடியில நடக்குது.ஆழியாறு சோதனைச்சாவடியை கடக்கும் சுற்றுலா பயணிகளிடம், 30 ரூபாய் நுழைவுக்கட்டணம், குரங்கு அருவியில் வாகனங்கள் 'பார்க்' செய்ய, 30 முதல் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 13ம் தேதி முதல் வனத்துறையினர் பலவித கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்; ஆனால், அதற்கான அறிவிப்பும், கட்டண விபரமும் வைக்கப்படாமல் உள்ளது.தற்போது, சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களிடமும் சோதனைச்சாவடியை கடக்க ஒருவருக்கு, 50 ரூபாய், வாகனங்களுக்கு ஏற்ப, 30 முதல் 100 ரூபாய் நுழைவு கட்டம் வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிக்க ஒருவருக்கு, 50 ரூபாய், அங்கு 'பார்க்' செய்ய வாகனங்களுக்கு, 30 முதல் 100 ரூபாய், கழிப்பிடத்தை பயன்படுத்த ஒருவருக்கு, பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது.'தனியார் சுற்றுலா மையம் போன்று, ஒவ்வொன்றுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கறாங்க,' என, சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். 'வால்பாறையில இருக்கற உறவினர் வீட்டுக்கு போகறதுக்கு, நுழைவு கட்டணம் எதுக்கு கட்டணும்,' என, உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியில் புலம்புகின்றனர்.கட்டண உயர்வு வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டை குறைப்பதுடன், வால்பாறை மக்களை தனித்து வாழவைக்கும் முயற்சி என்பதே நிதர்சனம்.கட்டண உயர்வு குறித்தும், 'ஆழியாறு போன்ற உள்ளூர் பகுதி மக்கள் வால்பாறை சென்றாலும் கட்டணம் செலுத்த வேண்டுமா' என்ற கேள்வியை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியரிடம், மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம்.அதற்கு அவர், கூறியதாவது:சரணாலயம் பகுதிக்குள்ள போற எல்லாரும் நுழைவுக்கட்டணம் செலுத்தணும். உள்ளூர் ஆளுக வால்பாறை போக வேண்டிய அவசியமில்லையே. சுற்றுலாவுக்காகத்தான போவாங்க. வால்பாறையில தங்கியிருக்கும் ஆட்கள் தவிர, எல்லோரும் கட்டாயம், ஆள், வாகன நுழைவு கட்டணம் செலுத்தணும்.வால்பாறையில இருக்கறவங்க ஆதார் உள்ளிட்ட 'அட்ரஸ் புரூப்' காட்டிட்டும், அரசு அதிகாரிகள் ஐ.டி., காட்டிட்டு, கட்டணம் செலுத்தாம போலாம். இந்த புதிய கட்டணம், சூழல் மேம்பாட்டுக்குழுவுக்கு (இ.டி.சி.,) சென்று, பழங்குடியினர் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. பலருக்கும் வேலைவாய்ப்பு தர்றோம், வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது; பழங்குடியின மக்கள் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.நிதியெல்லாம் எங்கே செல்கிறது!தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:புதிய கட்டண உயர்வு, நிச்சயம் கட்டணக்கொள்ளை தான். சூழல் மேம்பாட்டுக்குழு சார்பில் சேகரிக்கப்படும், பல கோடி ரூபாய் நிதி, பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது இல்லை.சிதிலமடைந்த வீடுகள், குடிநீர், கழிப்பிடம், ரோடு வசதியின்றி பழங்குடியின மக்கள் அதோகதியில் வாழ்வதே இதற்கு சாட்சி. வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது; மற்ற நிதி எங்கே செல்கிறது என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சூழல் மேம்பாட்டுக்குழு நிதியை பழங்குடியின மக்களுக்காக செலவிட வேண்டும். கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X