பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகைக்காக சிறப்பு தேர்வு அறிவிப்பு

Added : டிச 29, 2020
Share
Advertisement
உடுமலை:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, உதவித்தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு, அவர்களின் திறன்களை பரிசோதனை செய்யும் வகையில், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பாண்டு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியை அரசு

உடுமலை:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, உதவித்தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு, அவர்களின் திறன்களை பரிசோதனை செய்யும் வகையில், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பாண்டு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தேர்வு, பிப்., 21ம்தேதி நடக்கிறது. வட்டார அளவில், மையங்கள் அமைக்கப்பட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், இத்தேர்வில் விண்ணப்பிப்பது குறித்து, மாணவர்களுக்கு விளக்கமளிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தலைமையாசிரியர்கள், தேவையான அளவு விண்ணப்பங்களை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வினியோகித்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.அந்த விபரங்களை அரசு அறிவித்த பின்னர், தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் உதவியுடன் இணையதள வசதியுள்ள பள்ளிகளில் சென்று பதிவேற்றலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பிப்., 8ம் தேதிக்குள், மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு, உடுமலை கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X