பொள்ளாச்சி:'கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என, பொள்ளாச்சி தாலுகா சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:கட்டுமானப் பணிக்கு முக்கிய பங்கு வகிக்கும் சிமென்ட், கம்பி மற்றும் செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், கம்பி டன் ஒன்றுக்கு, 15,000 ரூபாய்; சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, 50 முதல், 60 ரூபாய் வரையிலும்; செங்கல் லோடு ஒன்றுக்கு, 3,000 முதல், 8,000 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.கடுமையான விலை ஏற்றத்தால் கட்டுமான பணிகள் அனைத்தும், படிப்படியாக முடங்கி வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.எனவே, கடுமையான விலை ஏற்றத்துக்கு எதிரான நடவடிக்கை எடுத்து, கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE