உடுமலை;உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு பகுதியில், மரங்களை வெட்டி, இயற்கை வளங்களை அழித்து, ஆக்கிரமித்து வருவதை தடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, அருகேயுள்ள அமராவதி நகர், ஆண்டியகவுண்டனூர்- 2 கிராமத்தில், ஜம்புகல்கரடு மலைப்பகுதி, 2,920 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை மேல், பழமையான கோட்டையும், கோவிலும் உள்ளது. மலை உச்சியில், வற்றாத சுனை உள்ளது. வனப்பகுதியாக உள்ள நிலையில், அதிகாரிகளின் துணையோடு, மலையை அழிக்கும் வகையில், பாறைகளை வெடி வைத்து தகர்த்தும், மரங்களை வெட்டியும் கடத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டருக்கு வழங்கியுள்ள மனு: மலையடிவாரத்தில், பழைய பட்டா அடிப்படையில், 700 ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள், பருவமழை காலங்களில் பயிர் சாகுபடியும், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு செல்ல, வனத்துறை அனுமதியில்லாததால், உரிய வழித்தடம் இல்லை. இந்நிலையில், ஒரு கும்பல் கடந்த சில நாட்களாக, மலைப்பகுதியை அழித்து, மரங்களை வெட்டி கடத்தி வருவதோடு, விவசாயிகள் பட்டா நிலத்தையும், தங்களுக்கு விலைக்கு தருமாறு, மிரட்டி வருகின்றனர்.சாயப்பட்டறை முதல், மலைக்கு, 2 கி.மீ.,துாரத்திற்கு புதிதாக பாதை அமைத்துள்ளனர். ஓடைகளை ஆக்கிரமித்து, நிலங்களை சமன் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, ஜம்புக்கல் கரடு மலை அழிப்பதை தடுக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE